காலை உணவு திட்டம் தொடக்கம்

சிவகாசியில் உள்ள அரசு பள்ளிகளில் காலை உணவு திட்டம் தொடங்கப்பட்டது.

Update: 2023-08-25 20:11 GMT

சிவகாசி, 

சிவகாசியில் உள்ள அரசு பள்ளிகளில் காலை உணவு திட்டம் தொடங்கப்பட்டது.

காலை உணவு திட்டம்

சிவகாசி அருகே உள்ள பள்ளப்பட்டி அரசு தொடக்கப்பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிவகாசி எம்.எல்.ஏ. அசோகன், யூனியன் துணைத்தலைவர் விவேகன்ராஜ் ஆகியோர் மாணவ, மாணவிகளுக்கு காலை சிற்றுண்டி வழங்கி திட்டத்தை தொடங்கி வைத்து, மாணவர்களுடன் அமர்ந்து சாப்பிட்டனர். நிகழ்ச்சியில் பள்ளப்பட்டி பஞ்சாயத்து தலைவர் ராஜபாண்டியன், துணைத்தலைவர் லோகேஸ்வரி, ஒன்றிய கவுன்சிலர்கள் கலைமணி, சுடர்வள்ளி சசிக்குமார், வார்டு உறுப்பினர் வைரகுமார், மற்றும் அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை பஞ்சாயத்து செயலர் முத்துப்பாண்டி செய்திருந்தார்.

எஸ்.ஆர்.என். பள்ளி

இதேபோல் திருத்தங்கல் எஸ்.ஆர்.என். பள்ளியில் நடைபெற்ற காலை உணவு திட்டத்தை சிவகாசி மேயர் சங்கீதா இன்பம் தொடங்கி வைத்து குழந்தைகளுடன் அமர்ந்து சாப்பிட்டார். இதில் துணைமேயர் விக்னேஷ்பிரியா காளிராஜன், மண்டல தலைவர்கள் குருசாமி, அழகுமயில், சேவுகன், கவுன்சிலர்கள் சசிக்குமார், திருப்பதி, ஸ்ரீநிகா, சேதுராமன், துரைப்பாண்டி, சுதாகரன், மாரீஸ்வரி, நிலானி, பொன்மாடத்தி, சரவணக்குமார், பாக்கியலட்சுமி, ராஜேஷ், தனலட்சுமி காசி, ஜெயராணி உள்பட பலர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை கமிஷனர் சங்கரன் செய்திருந்தார்.

Tags:    

மேலும் செய்திகள்