வெளிநாட்டு பறவைகளின் புகலிடமாக மாறிய நிலையூர் கண்மாய்- முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்கின்றன
திருப்பரங்குன்றம் அருகே நிலையூர் கண்மாயில் தட்ப வெப்பநிலைக்கு ஏற்ப பறவைகள் தரையில் கூடுகட்டி முட்டையிட்டு குஞ்சுபொறித்து இனப்பெருக்கம் செய்து வருகிறது.
திருப்பரங்குன்றம்
திருப்பரங்குன்றம் அருகே நிலையூர் கண்மாயில் தட்ப வெப்பநிலைக்கு ஏற்ப பறவைகள் தரையில் கூடுகட்டி முட்டையிட்டு குஞ்சுபொறித்து இனப்பெருக்கம் செய்து வருகிறது.
விவசாயத்தின் வாழ்வாதாரம்
தமிழகத்தில் உள்ள பெரிய கண்மாய்களின் வரிசையில் நிலையூர் கண்மாயும் சேர்ந்துள்ளது. மன்னர் காலத்தில் உருவாக்கப்பட்ட இந்த கண்மாய் 742 ஏக்கர் பரப்பளவும், சுமார் 27 அடி ஆழமும் கொண்டுள்ளது. பெரியமடை, சின்னமடை, உள்மடை என்று 3 மடைகளும், பெரிய கலுங்கு, சின்னகலுங்கு என்று 2 கலுங்கும் கொண்டதாகும். 1712 ஏக்கர் நிலங்களுக்கு பாசன வசதி கொண்ட கண்மாயாக உள்ளது. 25 கிராம விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்கும், நிலத்தடி நீர் ஆதாரமாகவும் விளங்குகிறது. இத்தகைய கண்மாய்க்கு இரை தேடி வெளிநாட்டு பறவைகள் வந்து செல்வது வழக்கமாக இருந்து வருகிறது
முட்டையிட்டு இனப்பெருக்கம்
இந்த நிலையில் தற்போது கண்மாயில் உள்ள மீன்களை இரையாக உட்கொள்வதற்காக பலவிதமான பறவைகள் வருகின்றன. மேலும் வாத்து, கொக்கு என்று உள்நாட்டு பறவைகளும் கண்மாயின் தண்ணீரில நீந்தி புழு பூச்சி, மீன்களை உண்டு வருகிறது. தற்போதுசில பறவைகள் தட்ப வெப்ப நிலை ஏற்ப தரையில் குச்சிகளால் வட்டவடிவில் கூடுகட்டி அதில் முட்டையிட்டு குஞ்சுபொறித்து இனப்பெருக்கம் செய்து வருகிறது.
கண்மாய்க்குள் தரை பகுதியில் அங்கும், இங்குமாக பல இடங்களில் முட்டைகள் இருப்பதை கண்டு அப்பகுதி மக்கள் வியப்பில் ஆழ்ந்துள்ளனர்