குடியிருப்பு பகுதியில் தேங்கி நிற்கும் மழைநீர்

குடியிருப்பு பகுதியில் தேங்கி நிற்கும் மழைநீரால் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.

Update: 2022-11-04 20:21 GMT

லால்குடியை அடுத்த மாடகுடி பகுதியில் வடிகால் வாய்க்கால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதால் குடியிருப்பு பகுதியில் மழை தண்ணீர் தேங்கி நிற்கிறது. அதுமட்டுமின்றி அந்த தண்ணீரில் விஷ பாம்புகள் நடமாட்டமுள்ளது. அந்த பாம்புகள் வீட்டுக்குள் புகுந்துவிடும் சூழலும் உள்ளது. இது தொடர்பாக ஊராட்சி நிர்வாகத்தில் மனு கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே இனிமேலாவது சம்பந்தப்பட்டவர்கள் வடிகால் வாய்க்காலில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்