உப்பள பாத்திகளில் தேங்கிய மழை நீர்

உப்பள பாத்திகளில் மழை நீர் தேங்கி நின்றது.

Update: 2023-02-03 18:45 GMT

பனைக்குளம், 

ராமநாதபுரம் மாவட்டத்தில் மீன்பிடி தொழிலுக்கு அடுத்தபடியாக உப்பு உற்பத்தி செய்யும் தொழிலும் நடைபெற்று வருகின்றது. இந்த நிலையில் தேவிபட்டினம் அருகே கோப்பேரிமடம் பகுதியில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பாகவே உப்பு உற்பத்தி செய்யும் தொழில் தொடங்கியது.

வடகிழக்கு பருவமழை சீசனில் கடந்த 2 மாதத்திற்கு மேலாக முழுமையாக மழை பெய்யாத காரணத்தால் முன்கூட்டியே உப்பு உற்பத்தி செய்யும் பணிகளில் தொழிலாளர்கள் ஈடுபட தொடங்கியுள்ளனர்.

அதற்காக கடந்த 1 மாதத்திற்கு மேலாகவே உப்பள பாத்திகளில் தேங்கி இருந்த மழை நீரை முழுமையாக வெளியேற்றி ஏற்கனவே மழை நீர் மற்றும் உப்பு நீருடன் பாத்திகளில் இருந்த கல் உப்பையும் முழுமையாக எந்திரம் மூலம் உடைத்து பாத்தியை சமதளப்படுத்தினர். கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் மோட்டார் மூலம் பாத்திகளில் உப்பு உற்பத்திக்காக தண்ணீர் பாய்ச்சினர். இதனிடையே கடந்த 2 நாட்களாக மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. இதனால் கோப்பேரி மடம் பகுதியில் உள்ள அனைத்து உப்பள பாத்திகளிலும் மழை நீர் அதிகளவில் தேங்கி நிற்கின்றது. இதன் காரணமாக உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

இதனால் உப்பு உற்பத்தியாளர்கள் கவலையடைந்துள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்