ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து ஆர்ப்பாட்டம்

தஞ்சை கலெக்்டர் அலுவலகம் முன்பு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-03-13 21:20 GMT

தஞ்சாவூர்;

தஞ்சை கலெக்டர் அலுவலகம் முன்பு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தினர் கருப்பு பேட்ஜ் அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் ராஜன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் கோவிந்தராசன் முன்னிலை வகித்தார்.ஆர்ப்பாட்டத்தில், ஊரக வளர்ச்சித்துறை ஊழியர்களளின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதில் கால தாமதம் செய்யும் முதன்மை செயலாளர் மற்றும் உயர் அதிகாரிகளின் மெத்தன போக்கை கண்டித்தும், ஊழியர்களின் கோரிக்கைகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசை வலியுறுத்தியும் கோஷங்களை எழுப்பினர். இதில் அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் ரெங்சாமி, மாவட்ட நிர்வாகிகள் இளையராஜா, ஆண்டனி, கார்த்திகேயன் உள்பட அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்