இட பிரச்சினை காரணமாக கத்தியால் குத்தியவர் கைது

ஆற்காட்டில் இட பிரச்சினை காரணமாக கத்தியால் குத்தியவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-09-05 18:31 GMT

ஆற்காடு

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு கிளைவ் பஜார் பகுதியைச் சேர்ந்தவர்கள் நவீன் (வயது 26), ராஜேஷ் (42), சாமுவேல் (42). இவர்களுக்குள் இடம் பிரச்சினை காரணமாக முன் விரோதம் இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் நேற்று இரவு சாமுவேல், நவீன், ராஜேஷ் ஆகியோருக்குள் தகராறு ஏற்பட்டது.

ஒரு கட்டத்தில் தகராறு முற்றி சாமுவேல் கத்தியால் நவீன், ராஜேஷ் ஆகிய இருவரையும் குத்தி உள்ளார்.

இதில் படுகாயம் அடைந்த இருவரும் மேல்விஷாரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுகுறித்த புகாரின் பேரில் ஆற்காடு டவுன் போலீசார் வழக்குப்பதிந்து சாமுவேலை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்