வாலிபருக்கு கத்திக்குத்து; 7 பேர் மீது வழக்கு

தொப்பூர் அருகே பணம் கொடுக்கல் வாங்கலில் மோதில் வாலிபருக்கு கத்திக்குத்து இதுதொடர்பாக போலீசார் 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Update: 2022-11-07 18:45 GMT

நல்லம்பள்ளி:

தொப்பூர் அருகே பாளையம்புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் நடராஜ் (வயது28). அதே ஊரை சேர்ந்தவர் சாய்குமார். இவர்களுக்கு இடையே பணம் கொடுக்கல் வாங்கல் தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று இதுதொடர்பாக இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் நடராஜிக்கு கத்திக்குத்து விழுந்தது. மேலும் சாய்குமாருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இவர்கள் 2 பேரும் தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த மோதல் குறித்து இருதரப்பினரும் கொடுத்த புகாரின் பேரில், தொப்பூர் போலீசார் இருதரப்பிலும் 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்