புனித சூசையப்பர் ஆலய திருவிழா கொடியேற்றம்
கோவில்பட்டி புனித சூசையப்பர் ஆலய திருவிழா கொடியேற்றம் நடந்தது.
கோவில்பட்டி:
கோவில்பட்டி புனித சூசையப்பர் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. காமநாயக்கன்பட்டி திருத்தல பங்கு தந்தை அந்தோணி குருஸ் அடிகளார் தலைமையில், உதவி பங்கு தந்தை ஜெரால்டு ரீகன், பாளையங்கோட்டை மறை மாவட்ட செயலக முதல்வர் ஞானபிரகாசம், கோவில்பட்டி ஆலய பங்கு தந்தை அலோசியஸ் துரைராஜ், உதவி பங்கு தந்தை மகேஷ் உள்ளிட்டவர்கள் திருத்தல கொடியை ஏற்றி வைத்தனர்.
தொடர்ந்து 10 நாட்கள் ஆலயத்தில் புனித நிகழ்வுகளும், திருப்பலியும், கலை நிகழ்ச்சிகளும் நடைபெறும். மே 7-ந் தேதி 10-ம் நாள் அன்று பாளையங்கோட்டை மறை மாவட்ட முன்னாள் ஆயர் ஜூடு பால்ராஜ் அடிகளார் தலைமையில் திருவிழா திருப்பலியும், நற்கருணை பவனியும் நடக்கிறது.