புனித சூசையப்பர் ஆலய திருவிழா கொடியேற்றம்

பணகுடி புனித சூசையப்பர் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

Update: 2023-04-22 21:28 GMT

பணகுடி:

பணகுடி புனித சூசையப்பர் ஆலய திருவிழா நேற்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. தூத்துக்குடி மறைமாவட்ட பொருளாளர் சகாயம் கொடியேற்றி வைத்தார். 10 நாட்கள் நடைபெறும் திருவிழாவில் தினமும் காலை 6 மணிக்கு பவனி, திருப்பலியும், மாலை 6.30 மணிக்கு மறையுரை, நற்கருணை ஆசீரும் நடக்கிறது. 8-ம் திருவிழா அன்று இரவு 7 மணிக்கு நற்கருணை பவனியும், 9-ம் திருவிழா அன்று மாலை ஜெபமாலை, மாலை ஆராதனையும், இரவு 10 மணிக்கு தேர்ப்பவனியும், 10-ம் திருவிழாவான வருகிற 1-ந்தேதி காலை 6 மணிக்கு பெருவிழா கூட்டு திருப்பலியும், பகல் 2 மணிக்கு தேர்ப்பவனியும், மாலை 6.30 மணிக்கு தேரில் வைத்து நற்கருணை ஆசீரும் நடக்கிறது. திருவிழா ஏற்பாடுகளை பங்குகுரு இருதயராஜ் மற்றும் பங்குமக்கள் செய்து வருகிறார்கள்.


Tags:    

மேலும் செய்திகள்