புனித சூசையப்பர் ஆலய தேர்ப்பவனி

பணகுடி புனித சூசையப்பர் ஆலய தேர்ப்பவனி நடைபெற்றது.

Update: 2023-05-01 20:16 GMT

பணகுடி;

பணகுடி புனித சூசையப்பர் ஆலய திருவிழா கடந்த 22-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் காலை திருப்பலியும், மாலையில் மறையுரை, நற்கருணை ஆசீரும் நடைபெற்றது. 8-ம் திருவிழாவில் மாலை நற்கருணை பவனியும், 9-ம் திருவிழா அன்று மாலை சிறப்பு மாலை ஆராதனையும், இரவு தேர்ப்பவனியும் நடந்தது. 10-ம் திருவிழாவான நேற்று காலை பெருவிழா கூட்டு திருப்பலியும், மாலை தேர்ப்பவனியும், தொடர்ந்து நற்கருணை ஆசீரும் நடைபெற்றது. திருவிழா ஏற்பாடுகளை பங்கு குரு இருதயராஜ், தலைவர் ஸ்ரீதர் மற்றும் பங்குமக்கள் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்