புனித செல்வநாயகி அம்மாள் ஆலய திருவிழா கொடியேற்றம்
புனித செல்வநாயகி அம்மாள் ஆலய திருவிழா கொடியேற்றம் நடைபெற்றது.
திருச்சி முதலியார் சத்திரம், காஜாப்பேட்டை இடையே ஆலம்தெருவில் அமைந்துள்ள புனித செல்வநாயகி அம்மாள் ஆலய திருவிழா நேற்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. புனித மரியன்னை பேராலய அருட்தந்தையர்கள் சகாயராஜ், ஜான்கிறிஸ்டோபர் ஆகியோரால் பவனிக்கு பிறகு, கொடிஏற்றம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதனை தொடர்ந்து ஆடம்பர திருப்பலியும் நடைபெற்றது. தினமும் மாலை 6 மணிக்கு சிறப்பு நவநாள், மறையுரையுடன் திருப்பலி நடக்கிறது. வருகிற 25-ந் தேதி மின் அலங்கார தேர்பவனி நடைபெறுகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை ஆலய நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.