புனித அந்தோணியார் ஆலய திருவிழா
நாகை புனித அந்தோணியார் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
நாகப்பட்டினம்:
நாகை கடற்கரை சாலையில் உள்ள பழமை வாய்ந்த புனித அந்தோணியார் ஆலய ஆண்டு திருவிழா நேற்று முன்தினம் இரவு கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக மாலை 6 மணியளவில் அலங்கரிக்கப்பட்ட சிறிய தேரில் புனித அந்தோணியார் மற்றும் திருக்கொடி வைக்கப்பட்டு ஆலயத்தில் இருந்து முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. தொடர்ந்து, ஆலயத்தை வந்தடைந்ததும் கொடியேற்றம் நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து திருப்பலி நிறைவேற்றப்பட்டது. இதில் திரளானோர் கலந்து கொண்டனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பெரிய தேரோட்டம் வருகிற 25-ந் தேதி நடக்கிறது.