புனித அந்தோணியார் ஆலய திருவிழா
விக்கிரமசிங்கபுரம் புனித அந்தோணியார் ஆலய திருவிழா நடைபெற்றது.
விக்கிரமசிங்கபுரம்:
விக்கிரமசிங்கபுரம் அகஸ்தியர்புரம் பங்கு புனித அந்தோணியார் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதைமுன்னிட்டு ஆலயத்திற்கு அந்தோணியாரின் 13 அடி உயரமுள்ள திருஉருவ சிலையை தெற்கு அகஸ்தியர்புரம் பகுதியில் இருந்து ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது. இதில் அருட்தந்தையர்கள் ஜோசப், ஜான் பீட்டர், அந்தோணிசாமி, ராபின் உள்பட திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். திருவிழா நாட்களில் தினமும் திருப்பலி நடைபெறும். முக்கிய திருவிழாவான வருகிற 13-ந் தேதி (சனிக்கிழமை) மதியம் அசன விருந்து, மாலையில் திருப்பலி, இரவு புனிதரின் தேர்பவனி நடைபெறும். 14-ந் தேதி மாலை நன்றி திருப்பலியுடன் கொடியிறக்கம் நடக்கிறது. ஏற்பாடுகளை தலைவர் ஜெயராஜ், செயலாளர் சுவாமிதாஸ், பொருளாளர் அந்தோணி மற்றும் புனித அந்தோணியார் நற்பணி மன்ற நிர்வகிகள் செய்து வருகின்றனர்.