எஸ்.எஸ்.எஸ். கல்லூரி ஆண்டு விழா
ஆற்காடு எஸ்.எஸ்.எஸ். கல்லூரி ஆண்டு விழா நடந்தது. இதில் நடிகர் ஸ்ரீகாந்த் கலந்துகொண்டார்.
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு எஸ்.எஸ்.எஸ். கலை மற்றும் அறிவியல் கல்லூரி விளையாட்டு விழா மற்றும் ஆண்டு விழா நடைபெற்றது. கல்லூரி நிறுவனத் தலைவர் ஏ.கே..நடராஜன் தலைமை தாங்கினார். பொருளாளர் ஏ.என்.சரவணன், நிர்வாக அறங்காவலர் ஏ.என்.செல்வம், செயலாளர் ஏ.என்.சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். உடற்கல்வி இயக்குனர் தியாகராஜன் வரவேற்றார்.
ஆற்காடு டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயகமூர்த்தி ஒலிம்பிக் சுடர் ஏற்றி வைத்து மாணவர்களின் ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். ஊர்வலம் முக்கிய சாலைகள் வழியாக சென்று கல்லூரியில் நிறைவு பெற்றது. தொடர்ந்து கல்லூரி வளாகத்தில் ராணுவம் மற்றும் காவல்துறை பயிற்சி பெற மைதானத்தை ராணிப்பேட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு பிரபு திறந்து வைத்து விளையாட்டு போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினார்.
மாலையில் நடைபெற்ற ஆண்டு விழாவில் வணிகவியல் துறை தலைவர் கே.விஜயலட்சுமி வரவேற்றார். கல்லூரி முதல்வர் ஜி..ராஜலட்சுமி ஆண்டறிக்கை வாசித்தார். சிறப்பு விருந்தினராக திரைப்பட நடிகர் ஸ்ரீகாந்த் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி பேசினார். அப்போது மாணவர்கள் நண்பர்களிடம் தையும் எதிர்பார்க்காமல் எந்த பேதமும் இன்றி வாழும் பருவம் இந்த கல்லூரி பருவம். அதை சிறப்பாக செய்ய வேண்டும் என்று கூறினார். முடிவில் வணிகவியல் துறை தலைவர் அறிவுடைநம்பி நன்றி கூறினார். இதனைத் தொடர்ந்து மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.
விழாவிற்கான ஏற்பாடுகளை வணிக நிர்வாகவியல் துறை தலைவர் கே.வி.சிவக்குமார் மற்றும் கல்லூரி நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.