எஸ்.எஸ்.எல்.சி. முடித்த மாணவிகளுக்கு நிரந்தர மதிப்பெண் சான்றிதழ்
எஸ்.எஸ்.எல்.சி. முடித்த மாணவிகளுக்கு நிரந்தர மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட்டது.
தமிழகத்தில் கடந்த மே மாதம் எஸ்.எஸ்.எல்.சி, பொதுத்தேர்வு முடிவு வெளியிடப்பட்டது. அதைத் தொடர்ந்து மாணவ- மாணவிகளுக்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. இந்த நிலையில் எஸ்.எஸ்.எல்.சி மாணவ, மாணவிகளுக்கு நிரந்தர மதிப்பெண் சான்றிதழ்களை வழங்க அரசு உத்தரவிட்டு இருந்தது. அதன்படி காட்பாடி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு எழுதிய மாணவிகளுக்கு நிரந்தர மதிப்பெண் சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் சரளா தலைமை தாங்கி மாணவிகளுக்கு நிரந்தர மதிப்பெண் சான்றிதழ் வழங்கினார். நிகழ்ச்சியில் உதவி தலைமை ஆசிரியர் திருமொழி, நிவேதிதா தொழிற்கல்வி ஆசிரியர் செ.நா.ஜனார்த்தனன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.