எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு நாளை தொடக்கம்

எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு நாளை (வியாழக்கிழமை) தொடங்குகிறது. தேர்வு மையங்களில் முன்னேற்பாடு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

Update: 2023-04-04 18:26 GMT

எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு

தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் 13-ந் தேதி தொடங்கி கடந்த 3-ந் தேதியுடன் நிறைவடைந்தது. இதேபோல் பிளஸ்-1 பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் 14-ந் தேதி தொடங்கி இன்றுடன் (புதன்கிழமை) நிறைவடைகிறது. இதையடுத்து எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு நாளை (வியாழக்கிழமை) தொடங்குகிறது.

நாளை தமிழ்பாடத்தேர்வு நடைபெற உள்ளது. அதன்பின் 10-ந் தேதி ஆங்கில பாடத்தேர்வும், 13-ந் தேதி கணித பாடத்தேர்வும், 17-ந் தேதி அறிவியல் பாடத்தேர்வும், 20-ந் தேதி சமூக அறிவியல் பாடத்துடன் தேர்வு நிறைவடைகிறது.

128 மையங்கள்

புதுக்கோட்டை மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வை 25 ஆயிரத்து 504 மாணவ-மாணவிகள் எழுத உள்ளனர். மாணவர்களுக்கு தேர்வுக்கான நுழைவுச்சீட்டுகள் ஏற்கனவே வழங்கப்பட்டு விட்டன. தேர்வுக்காக 128 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்வு மையங்களில் முன்னேற்பாடு பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் தேர்வு மையங்களில் வகுப்பறைகளில் மாணவ-மாணவிகளின் இருக்கைகளில் நுழைவுச்சீட்டு எண் எழுதும் பணி மற்றும் தேர்வு மையங்களில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்படுகிறது. தேர்வுக்கான வினாத்தாள்கள் அனைத்தும் பாதுகாப்பாக மையங்களில் வைக்கப்பட்டுள்ளது. துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தேர்வையொட்டி புதுக்கோட்டை ராணியார் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் வகுப்பறையில் முன்னேற்பாடு பணிகள் மும்முரமாக நடைபெற்றது.

Tags:    

மேலும் செய்திகள்