தந்தை இறந்த நிலையிலும் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுதிய மாணவி

ராணிப்பேட்டை அருகே தந்தை இறந்த நிலையிலும், எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வினை எழுதிய மாணவியின் செயல் நெகிழ்ச்சியையும், பெரும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

Update: 2023-04-13 19:06 GMT

தந்தை சாவு

ராணிப்பேட்டையே அடுத்த புளியங்கண்ணு பகுதியை சேர்ந்தவர் துளசி (வயது 37), லாரி உரிமையாளர். இவரது மனைவி அருணாதேவி (35). இவர்களுக்கு கிருத்திகா (15), அமர்நாத் (13), வாசுகி (11) என்ற மூன்று மகள்கள் உள்ளனர். மூத்த மகள் கிருத்திகா அதேப்பகுதியில் உள்ள அரசினர் மேல்நிலைப்பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி. படித்து வருகின்றார்.

தற்போது எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு நடைபெற்று வருகிறது. கிருத்திகா நவல்பூர் பகுதியில் உள்ள கிரேஸ் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி தேர்வு மையத்தில் பொதுத்தேர்வு எழுதி வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு கிருத்திகாவின் தந்தை துளசி தூங்கிய நிலையிலேயே இறந்துவிட்டார். இதனால் குடம்பமே சோகத்தில் மூழ்கியது.

தேர்வு எழுதினார்

துளசி, தனது மகள் கிருத்திகா எதிர்காலத்தில் தாசில்தாராக வேண்டும் என கூறிவந்தார். இதனால் தந்தகை இறந்த நிலையிலும், மாணவி சோகத்துடன் நேற்று நடைபெற்ற எஸ்.எஸ்.எல்.சி. கணிதத்தேர்வை எழுதினார்.

தந்தையின் உடல் வீட்டில் இருக்கும் நிலையில் சோகத்துடன் மாணவி தேர்வு எழுதிய சம்பவம் அப்பகுதியில் பெரும் நெகிழ்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்