எஸ்எஸ்சி தேர்வு - சென்னையில் நாளை பயிற்சி முகாம்
அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் நடைபெறும் பயிற்சி முகாமில் ஆர்வமுள்ள அனைவரும் நேரில் பங்கேற்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை,
எஸ்எஸ்சி தேர்வு குறித்த ஒரு நாள் பயிற்சி முகாம் நாளை காலை 9.30 மணிக்கு நடைபெறுகிறது.சென்னையில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் நடைபெறும் பயிற்சி முகாமில் ஆர்வமுள்ள அனைவரும் நேரில் பங்கேற்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பயிற்சி முகாமுக்கு நேரில் வர இயலாதவர்கள் TN DIPR இணையதள பக்கத்திலும், அரசு கேபிள் டிவியிலும் நேரலையில் காணலாம்.
எஸ்எஸ்சி தேர்வுகளுக்கான பயிற்றுநர்கள் மற்றும் தேர்ச்சி பெற்றவர்கள் இந்த முகாமில் தேர்வு குறித்த முக்கிய ஆலசோனைகளை வழங்க உள்ளனர். ஆர்வமுள்ள அனைவரும் இதில் கலந்து கொண்டு பயன்பெறலாம்.