ரூ.9¾கோடியில் வளர்ச்சித்திட்ட பணிகள்

ரூ.9¾கோடியில் வளர்ச்சித்திட்ட பணிகள்

Update: 2022-12-15 10:42 GMT

காங்கயம்

காங்கயம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் ரூ.9¾ கோடியில் நடந்து வரும் வளர்ச்சித்திட்ட பணிகள் குறித்து மாவட்ட கண்காணிப்பு அதிகாரி எம்.கருணாகரன் ஆய்வு மேற்கொண்டார்.

வளர்ச்சி திட்ட பணிகள்

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை அரசு சிறப்பு செயலாளர், மாவட்ட கண்காணிப்பு அலுவலருமான எம்.கருணாகரன் தலைமையில், திருப்பூர் மாவட்ட கலெக்டர் எஸ்.வினீத் முன்னிலையில் நேற்று காங்கயம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட பகுதிகளில் ரூ.9¾ கோடியில் நடந்து வரும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்கள்.

காங்கயம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட படியூர் ஊராட்சி, சத்யா நகரில் ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு துறையின் சார்பில் ஊட்டச்சத்தை உறுதி செய்யும் திட்டத்தின் கீழ் அங்கன்வாடி மையத்தையும், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் எண்ணும், எழுத்தும் திட்டத்தையும், ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில் கனிமம் மற்றும் சுரங்கம் திட்டத்தின் கீழ் ரூ.19.60 லட்சத்தில் 2 புதிய வகுப்பறை கட்டும் பணி, சிவன்மலை ஊராட்சி கணபதி நகரில் 15-வது நிதிக்குழு திட்டத்தின் கீழ் ரூ.4.98 லட்சத்தில் 45 கிராமப்புற வீடுகளில் குடிநீர் குழாய் வினியோகத்தையும், எருக்கலங்காட்டுப்புதூரில் கிராமப்புற வீடுகளுக்கு கழிவறை கட்டும் பணி,காங்கயம் நகராட்சியில் நகராட்சி சார்பில் ரூ.9.62 கோடியில் வாரச்சந்தையில் புதிய கடைகள் கட்டும் பணிகள் குறித்தும் காங்கயம் நகராட்சி அலுவலகம் மற்றும் காங்கயம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டார்.

ரூ.9¾ கோடியில் பணிகள்

அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.2.67 லட்சத்தில் விருப்பம்பள்ளத்தில் தார் சாலை அமைக்கும் பணி, வேளாண்மை துறையின் சார்பில் கலைஞர் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் பொத்தியபாளையத்தில் ரூ.11 லட்சத்து 60 ஆயிரத்து 430 மானியத்தில் தென்னை நாற்றுக்கள், பவர் ஸ்பிரேயர், ஹேண்ட் ஆப்ரேட்டிங் பவர் ஸ்பிரேயர், கிட் மற்றும் தார்பாய்களையும், ஆதிதிராவிடர் நலத்துறையின் சார்பில் பெண்கள் விடுதிகளையும் என மொத்தம் ரூ.9.88 கோடியில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை ஆய்வு மேற்கொண்டார்.

விரைந்து முடிக்க அறிவுறுத்தல்

புதிய வளர்ச்சி திட்ட பணிகளை விரைவாகவும், தரமாகவும் பணிகளை முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வருமாறு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை அரசு சிறப்பு செயலாளர், திருப்பூர் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் எம்.கருணாகரன் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வின் போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் அ.லட்சுமணன், காங்கயம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் டி.மகேஷ்குமார், காங்கயம் நகராட்சி ஆணையாளர் எஸ்.வெங்கடேஸ்வரன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.


============

Tags:    

மேலும் செய்திகள்