எஸ்.ஆர்.எம்.யூ. தொழிற்சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்

எஸ்.ஆர்.எம்.யூ. தொழிற்சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2022-09-19 20:14 GMT

பொன்மலைப்பட்டி:

திருச்சி பொன்மலை ரெயில்வே பணிமனை முன்பு, தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சியும், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டமும் எஸ்.ஆர்.எம்.யூ. தொழிற்சங்கம் சார்பில் நடைபெற்றது. இதில் தொழிலாளர் விரோத அடக்குமுறைகளுக்கு எதிராக கடந்த 1968-ம் ஆண்டு தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு பணி மாறுதல், பணிநீக்கம் பெற்று போராட்டத்தினால் உயிர் நீத்த தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தும் வகையில் ரெயில்வே தியாகிகள் தினம் அனுசரிக்கப்பட்டு, தியாகிகளுக்கு வீர வணக்கம் செலுத்தப்பட்டது. மேலும் ஆண்டுக்கு 10 சதவீத ஆட்குறைப்பு செய்து 3 வருடத்தில் அனைவரையும் வீட்டுக்கு அனுப்பும் திட்டத்தை கைவிட வலியுறுத்தியும், ரெயில் நிலையங்கள் மற்றும் ரெயில்வேக்கு சொந்தமான இடங்களை தனியாருக்கு தாரை வார்ப்பதை கண்டித்தும், புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தியும், ரெயில்கள் தனியார் மையம் மற்றும் ஆட்குறைப்பு நடவடிக்கைகளை கண்டித்தும், ரெயில் கட்டணம் மற்றும் சரக்கு கட்டணத்தை உயர்த்தி ஏழை மக்கள் மற்றும் வர்த்தகர்களின் வயிற்றில் அடிக்க நினைப்பதை நிறுத்திட வலியுறுத்தியும் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு தெற்கு ெரயில்வே மஸ்தூர் யூனியன் தொழிற்சங்க துணை பொதுச் செயலாளர் வீரசேகரன் தலைமை தாங்கினார். இதில் ரெயில்வே தொழிலாளர்கள் கலந்து கொண்டு இன்னுயிர் நீத்த தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தியதுடன், தனியார் மய கொள்கையை கண்டித்தும், தொழிலாளர் விரோத போக்கை கடைபிடிக்கும் மத்திய அரசை கண்டித்தும் கோஷங்களை எழுப்பினர்.

Tags:    

மேலும் செய்திகள்