எஸ்.ஆர்.எம். கல்லூரி மாணவர்கள் சாதனை
எஸ்.ஆர்.எம் பிசியோதெரபி கல்லூரியில், பிசியோ ரன்-2023 ரீசவுண்டிங் ஓவர்நைட் மொமண்டஸ் என்ற பெயரில், 80 பிசியோதெரபி மாணவர்கள் ஒளிரும் ஜோதியுடன் கலந்துகொண்ட இடைவிடாத தொடர் ஓட்டம் நடைபெற்றது.
செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூரில் அமைந்துள்ள எஸ்.ஆர்.எம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தில் உள்ள எஸ்.ஆர்.எம் பிசியோதெரபி கல்லூரியில், பிசியோ ரன்-2023 ரீசவுண்டிங் ஓவர்நைட் மொமண்டஸ் என்ற பெயரில், 80 பிசியோதெரபி மாணவர்கள் ஒளிரும் ஜோதியுடன் கலந்துகொண்ட இடைவிடாத தொடர் ஓட்டம் (2,350 கிமீ) நடைபெற்றது. நிகழ்ச்சியின் ஜோதி நிறைவு விழாவில் 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். உலக பிசியோதெரபி தினத்தை நினைவு கூறும் வகையில் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.
அரியானாவில் உள்ள எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் தொடங்கிய ஓட்டம் காட்டாங்கொளத்தூரில் உள்ள எஸ்.ஆர்.எம்.ஐ.எஸ்.டி.யில் நிறைவடைந்தது. அரியானா மாநிலத்தில் உள்ள சோனேபட் பகுதியில் உள்ள எஸ்.ஆர்.எம்.பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் டாக்டர் பரம்ஜித் சிங் ஜஸ்வால் ஆகஸ்டு 30-ந் தேதி அன்று ஜோதியை துவக்கி வைத்தார். நிறைவு விழாவில் எஸ்.ஆர்.எ.ம். எம்.சி.எச். அண்ட் ஆர்.சி-இன் ப்ரோ துணைவேந்தர், லெப்டினன்ட் கர்னல் (டாக்டர்) ஏ.ரவிக்குமார், தலைமை விருந்தினராக தாம்பரம் போலீஸ் துணை கமிஷனர் பவன் குமார் ரெட்டி ஆகியோர் கலந்து கொண்டார். இந்த ஓட்டத்தில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு கின்னஸ் உலக சாதனையின் நடுவர் திரு ரிஷி நாத் சான்றிதழ் வழங்கினார். நிகழ்ச்சியில் பதிவாளர் டாக்டர் எஸ்.பொன்னுசாமி, டீன் (மருத்துவம்) டாக்டர் நிதின் மதுசூதன் நகர்கர், டீன் (பிசியோதெரபி கல்லூரி) பேராசிரியர் டி.எஸ். வீர கவுதமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.