ஸ்ரீவைகுண்டம்கள்ளபிரான் சுவாமி கோவில் சித்திரை திருவிழா செவ்வாய்க்கிழமைகொடியேற்றத்துடன் தொடங்குகிறது

ஸ்ரீவைகுண்டம்கள்ளபிரான் சுவாமி கோவில் சித்திரை திருவிழா செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது

Update: 2023-04-10 18:45 GMT

ஸ்ரீவைகுண்டம்:

நவதிருப்பதி பெருமாள் கோவில்களில் முதல் கோவிலும், சூரியன் ஸ்தலமான ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் சுவாமி கோவிலில்.சித்திரை திருவிழாவை முன்னிட்டு நேற்று காலை 6 மணி முதல் 7மணி வரை தேங்காய் வாங்குதல் நிகழ்ச்சியும், மாலை 6 மணிக்கு திருமுளைச்சாத்து மிருத்ஸங்கிரகணம் நிகழ்ச்சியும், இரவு தோளுக்கினியானில் சேனை முதல்வர் புறப்பாடு நிகழ்ச்சி நடைபெற்றது. இன்று(செவ்வாய்க்கிழமை) காலை 7.25 மணி முதல் 9 மணிக்குள் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. தொடர்ந்து 10 நாட்கள் விழா நடைபெறும். விழாநாட்களில் காலையில் தோளுக்கினியானில் வீதி புறப்பாடு நிகழ்ச்சியும் தங்க மசகிரியில் வைத்து திருமஞ்சனம் தீர்த்தவாரி விநியோக கோஷ்டியும், சிம்ம வாகனம் அனுமார் வாகனம், ேசஷ வாகனம், யானை வாகனம் உள்ளிட்ட வாகனங்களில் சுவாமி திருவீதி உலா புறப்பாடு நிகழ்ச்சியும் நடக்கிறது. சித்திரை திருவிழாவான 5-ம் நாள் காலை 9.30மணிக்கு ஸ்ரீீகள்ளபிரான், ஸ்ரீ காசினி வேந்தபெருமாள், விஜயாசனபெருமாள், சுவாமிகள் நம்மாழ்வார் மங்களாசாசனமும் நடைபெறுகிறது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி கோவலமணிகண்டன், தக்கார் அஜித், ஆய்வாளர் நம்பி கோவில் ஸ்தலத்தார்கள் ராஜப்பா வெங்கடாச்சாரி, சீனிவாசன், தேவராஜன், கண்ணன் மற்றும் பேரூராட்சி பணியாளர்கள், பக்தர்கள் செய்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்