ஸ்ரீவைகுண்டம் பேரூராட்சி தெருக்களில் தூய்மை பணி

ஸ்ரீவைகுண்டம் பேரூராட்சி தெருக்களில் தூய்மை பணி நடந்தது.

Update: 2023-04-10 18:45 GMT

ஸ்ரீவைகுண்டம்:

ஸ்ரீவைகுண்டம் பேரூராட்சி நிர்வாகத்தினரோடு இணைந்து போலீசார், அங்குள்ள 3-வது, 4-வது வார்டு பகுதிகளில் தூய்மை பணியில் ஈடுபட்டனர். இந்த பணியை போலீஸ் துணை சூப்பிரண்டு மாயவன் ஆலோசனையின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்னராஜ் தொடங்கி வைத்தார். ஸ்ரீவைகுண்டம் சிவகாமி அம்மன் கோவில் தெரு, மகாதேவர் கோவில் தெரு, சிவன் கோவில் தெரு உள்ளிட்ட பகுதிகளில் சாலை ஓரங்களில் இருந்த செடிகள், கருவேல மரங்கள் மற்றும் குப்பைகளை போலீசாரும், பேரூராட்சி பணியாளர்களும் இணைந்து அகற்றினர். இதில் பேரூராட்சி தலைவர் சினேகவள்ளி, துணைத் தலைவர் கன்னியம்மாள் சண்முகசுந்தரம், பேரூராட்சி சுகாதார ஆய்வாளர் தியாகராஜன் உள்பட பலர் தூய்மை பணியில் ஈடுபட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்