ஸ்ரீரங்கம்: வைகுண்ட ஏகாதசி பகல்பத்து 5-ம் நாள் திருவிழா - திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
வைகுண்ட ஏகாதசி பகல்பத்து 5-ம் நாள் திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
திருச்சி,
திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தில் உள்ள பிரசித்தி பெற்ற அரங்கநாத சுவாமி கோவிலில் வைகுண்ட ஏகாதசி பகல்பத்து திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது.
இந்த திருவிழாவின் 5-ம் நாளான இன்று நம்பெருமாள் பாண்டியன் கொண்டை அலங்காரத்தில், விமான பதக்கம், ரத்தின அபயஹஸ்தம், முத்துச்சரம், அடுக்குப்பதக்கம் உள்ளிட்ட சர்வாலங்காரங்களை அணிந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். இந்த விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.