தரங்கம்பாடி மீனவர்களை தாக்கி மீன்கள், வலைகளை பறித்து சென்ற இலங்கை கடற்கொள்ளையர்கள்

கோடியக்கரை அருகே நடுக்கடலில் மீன்பிடித்து கொண்டிருந்த போது தரங்கம்பாடி மீனவர்களை தாக்கி அவர்களிடம் இருந்து மீன்கள் மற்றும் வலைகளை இலங்கை கடற்கொள்ளையர்கள் பறித்து சென்றனர்.

Update: 2022-10-15 18:45 GMT

பொறையாறு:

கோடியக்கரை அருகே நடுக்கடலில் மீன்பிடித்து கொண்டிருந்த போது தரங்கம்பாடி மீனவர்களை தாக்கி அவர்களிடம் இருந்து மீன்கள் மற்றும் வலைகளை இலங்கை கடற்கொள்ளையர்கள் பறித்து சென்றனர்.

படகின் மீது மோதினர்

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே பெருமாள்பேட்டை மீனவ கிராமத்தை சேர்ந்த பூவரசன் (வயது25) என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் அவரும், அதே பகுதியை சேர்ந்ததென்னரசன் (30), ஆறுமுகம் (60), நிவாஸ் (24) மற்றும் சந்திரபாடியை சேர்ந்த அருள்ராஜ் (34), சரத் (32) ஆகிய 6 மீனவர்களும் கடந்த 12-ந் தேதி மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர்.இவர்கள் நேற்று முன்தினம் இரவு கோடியக்கரையில் இருந்து 20 நாட்டிகல் கடல் மைல் தூரத்தில் இலங்கை எல்லை அருகே மீன் பிடித்துக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு 4 படகுகளில் வந்த இலங்கை கடற்கொள்ளையர்கள். மீனவர்களின் படகின் மீது மோதினர்.

மீன்களை பறித்து சென்றனர்

பின்னர் மீனவர்களை கற்கள், கட்டை மற்றும் சுலுக்கியால் தாக்கி விட்டு அவர்களது படகில் இருந்த மீன்கள், வலைகளை பறித்து சென்றனர். இதை தொடர்ந்து நேற்று அதிகாலை மீனவர்கள் கரை திரும்பினர். காயம் அடைந்த மீனவர்கள் தரங்கம்பாடி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிகப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.இதுகுறித்து பூவரசன் கொடுத்த புகாரின் பேரில் தரங்கம்பாடி கடலோர காவல் படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த தாக்குதல் சம்பவம் நாகை மாவட்ட கடல் எல்லையில் வருவதால் நாகை, கீழையூர் கடலோர காவல் படை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags:    

மேலும் செய்திகள்