எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் 23 பேரை கைது செய்த இலங்கை கடற்படை

மீனவர்களின் 2 விசைப்படகுகளையும் இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

Update: 2024-02-04 01:27 GMT

கோப்புப்படம் 

ராமநாதபுரம்,

தமிழக கடலோரப் பகுதிகளில் இருந்து மீன் பிடிப்பதற்காக கடலுக்குச் செல்லும் மீனவர்களை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக குற்றம்சாட்டி இலங்கை கடற்படையினர் கைது செய்வதும், அவர்களின் படகுகளை பறிமுதல் செய்வதும் தொடர்கதையாகி வருகிறது.

இந்த நிலையில் காங்கேசன் எல்லைப் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 23 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். மேலும் அவர்களது 2 விசைப்படகுகளையும் பறிமுதல் செய்த இலங்கை கடற்படையினர், அவர்களை விசாரணைக்காக காங்கேசன் துறைமுகத்திற்கு அழைத்துச் சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


Full View


Tags:    

மேலும் செய்திகள்