தமிழக மீனவர்கள் 18 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் 18 பேரை 2 படகுகளுடன் இலங்கை கடற்படை கைது செய்தது .

Update: 2024-01-16 15:43 GMT

சென்னை, 

புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்தில் இருந்து  கடலுக்கு மீன் பிடிக்க சென்ற தமிழக மீனவர்கள் 12 பேரை கடந்த 13 -ம் தேதி  இலங்கை கடற்படை கைது செய்தது .இலங்கை சிறையில் உள்ள தமிழ்நாடு மீனவர்களையும் அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவித்திட நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று மத்திய மந்திரி ஜெய்சங்கருக்கு  முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார்.

இந்நிலையில், இன்று எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் 18 பேரை 2 படகுகளுடன் இலங்கை கடற்படை கைது செய்தது . 

இலங்கை மன்னார் தாள்வுபாடு கடற்பரப்பில் மீன்பிடித்தபோது ராமநாதபுரம் மீனவர்கள் 18 பேரை  இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. 


Tags:    

மேலும் செய்திகள்