விமானத்தில் கடத்தி வரப்பட்ட அணில்கள் வனத்துறையினரிடம் ஒப்படைப்பு

விமானத்தில் கடத்தி வரப்பட்ட அணில்கள் வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

Update: 2023-10-01 21:21 GMT

செம்பட்டு:

மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் இருந்து திருச்சிக்கு கடந்த 29-ந் தேதி மலிந்தோ விமானம் வந்தது. இந்த விமானத்தில் வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது அந்த விமானத்தில் வந்த பெண் பயணியான விஜயலட்சுமி என்பவரது கைப்பையில் மலேசியா அணில்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். மேலும் தப்பிேயாடிய அணில் பிடிபட்டது. இதையடுத்து 2 அணில்களும் நேற்று மதியம் வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டன. இது குறித்து வனத்துறையினர் விசாரணை மேற்கொள்கின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்