கம்பிவேலியில் சிக்கி புள்ளிமான் சாவு
கம்பிவேலியில் சிக்கி புள்ளிமான் இறந்தது.
மங்களமேடு:
பெரம்பலூர் மாவட்டம், மங்களமேட்டை அடுத்துள்ள லெப்பைக்குடிக்காட்டில் இருந்து பென்னக்கோணம் ரோட்டில் ஒரு வீட்டின் அருகே போடப்பட்டிருந்த கம்பி வேலியில் 5 மாத ஆண் புள்ளிமான் ஒன்று சிக்கி உயிரிழந்தது. இது பற்றி ரஞ்சன்குடி எல்லைக்கு உட்பட்ட வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து மங்களமேடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆண்டவர் முன்னிலையில் வனக்காப்பாளர் அன்பரசுவிடம் அந்த மானின் உடல் ஒப்படைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து லெப்பைகுடிகாடு உதவி கால்நடை மருத்துவமனையில் உடற்கூறு பரிசோதனை செய்யப்பட்டு, மங்களம் காப்புக்காடு பகுதியில் அந்த மானின் உடல் புதைக்கப்பட்டது.