ரெயிலில் சிக்கி புள்ளிமான் பலி

அரக்கோணத்தில் ரெயிலில் சிக்கி புள்ளிமான் பலியானது.

Update: 2023-04-30 18:52 GMT

கடந்த சில நாட்களுக்கு முன் அரக்கோணம் - திருப்பதி மார்கத்தில் 3 மான்கள் ரெயிலில் அடிபட்டு இறந்தன. இந்த நிலையில் அதே மார்கத்தில் நேற்று காலை புள்ளி மான் ஒன்று ரெயிலில் அடிபட்டு தண்டவாளம் அருகே இறந்து கிடந்தது. இது குறித்து தகவல் அறிந்து அங்கு வந்த அரக்கோணம் ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தன், ராமகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் இறந்து கிடந்த மான் உடலை மீட்டு இது குறித்து ராணிப்பேட்டை வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

அங்கு வந்த வனத்துறையினர் இறந்த மானின் உடலை அரக்கோணம் கால்நடை மருத்துவர் மூலம் பிரேத பரிசோதனை செய்து, பின்னர் அந்தப்பகுதியிலேயே தீயிட்டு எரித்தனர். இது போன்று தொடர்ந்து மான்கள் ரெயிலில் சிக்கி இறப்பதை தடுக்க வனத்துறையினர் தண்டவாளம் பகுதியில் வேலி போன்ற தடுப்புகள் அமைக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்