கிரிவலப்பாதை அருகே பிளாஸ்டிக் கழிவுகளை உண்ணும் புள்ளிமான்கள் பாதிக்கப்படும் அபாயம்

திருவண்ணாமலை கிரிவலப்பாதை வனப்பகுதியில் பிளாஸ்டிக் கழிவுகளை மான்கள் உண்பதால் அவை பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் வேதனைப்பட்டு வருகின்றனர்.

Update: 2022-08-21 17:44 GMT

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை கிரிவலப்பாதை வனப்பகுதியில் பிளாஸ்டிக் கழிவுகளை மான்கள் உண்பதால் அவை பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் வேதனைப்பட்டு வருகின்றனர்.

கிரிவலப்பாதை வனப்பகுதி

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள அண்ணாமலை என்று பக்தர்களால் அழைக்கப்படும் மலை உள்ளது. இந்த மலையை சுற்றி கிரிவலப்பாதை அமைந்து உள்ளது. கிரிவலப்பாதைக்கும் மலைக்கும் இடைேய வனப்பகுதி உள்ளது.

இந்த வனப்பகுதியில் ஏராளமான புள்ளிமான்கள், குரங்குகள், காட்டு பன்றிகள், மயில்கள் உள்ளிட்ட பல்வேறு வன விலங்குகள் வசிக்கின்றன.

வன விலங்குகள் கிரிவலப்பாதையில் மக்கள் நடமாடும் பகுதிக்குள் வராத வகையில் வனப்பகுதியை சுற்றி இரும்பு வேலி அமைக்கப்பட்டு உள்ளது. பகல் நேரங்களில் தண்ணீர் தேடி இந்த இரும்பு வேலியின் அருகில் புள்ளிமான்கள் கூட்டம், கூட்டமாக வந்து நிற்கின்றன. கிரிவலப்பாதையில் செல்பவர்களில் பெரும்பாலானோர் மான்கள் கூட்டத்தை கண்டதும் இயற்கைக்கு மாறாக அவற்றிற்கு பழங்கள், ரஸ்க், பன் உள்ளிட்ட தின்பண்ட பொருட்களை வழங்கி வருகின்றனர்.

இதனால் சுயமாக வனப்பகுதியில் உள்ள செடி, கொடிகள், பழங்களை உண்டு வந்த புள்ளிமான்கள் தற்போது மக்கள் வழங்கும் உணவு பொருட்களுக்காக இரும்பு வேலியின் அருகில் வந்து நிற்கின்றன.

சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

பொதுமக்களும் தற்போது புள்ளிமான்களுக்கு உணவு வழங்குதாக நினைத்து பிளாஸ்டிக் கவரில் உள்ள உணவு பொருட்கள், பாக்கு மாட்டை தட்டுகளில் வைத்து உணவு பொருட்களை போடுகின்றனர். மேலும் சிலர் கிரிவலப்பாதையில் அன்னதானம் வழங்கிவிட்டு அங்குள்ள தேவையற்ற கழிவுகளை வனப்பகுதியில் வீசிவிட்டு செல்கின்றனர். இதனால் பிளாஸ்டிக் பைகள், காகித கப் உள்ளிட்டகழிவுகளை உணவு என நினைத்து உண்ணும் நிலை ஏற்பட்டுள்ளது.

பிளாஸ்டிக் கழிவுகள் மான்களின் உணவுக்குழாயில் அடைத்துக்கொண்டால் மான்கள் பாதிக்கும் அபாயம் ஏற்படும் என்பதால் சமூக ஆர்வலர்கள் வேதனைப்படுகின்றனர்.

எனவே இது குறித்து வனத்துறை அதிகாரிகள் தொடர்ந்து பகல் நேரங்களில் கிரிவலப்பாதையில் ரோந்து பணியில் ஈடுபட்டு மக்கள் வன விலங்குகளுக்கு தேவையற்ற உணவு பொருட்களை வழங்குவதை தடுக்க வேண்டும். மேலும் புள்ளிமான் உள்ளிட்ட வன விலங்குகளுக்கு தேவையான பழ வகை செடிகள் அதிகளவில் கிரிவலப்பாதையில் உள்ள வனப்பகுதியில் வளர்க்க வேண்டும் என்றும், தண்ணீர் வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்