கல்லாரில் தடுப்பு வேலியில் சிக்கி புள்ளிமான் சாவு

கல்லாரில் தடுப்பு வேலியில் சிக்கி புள்ளிமான் உயிரிழந்தது.

Update: 2022-08-11 14:23 GMT

மேட்டுப்பாளையம்

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு செல்லும் நெடுஞ்சாலையில் கல்லார் ரெயில்வே கேட் அருகே தனியாருக்கு சொந்தமான நர்சரி தோட்டம் உள்ளது. வனப்பகுதியையொட்டிய அமைந்துள்ள இந்த நர்சரிக்குள் யானை, காட்டுப்பன்றி, மான் உள்ளிட்ட வனவிலங்குகள் புகுந்து விடுதைத் தடுக்க தோட்டத்தை சுற்றிலும் பச்சை நிற நைலான் வலை தடுப்பு வேலி மற்றும் சோலார் மின் வேலி அமைக்கபட்டுள்ளது. கல்லாறு வனப்பகுதியில் இருந்து வழி தவறி வந்த ஆண் புள்ளி மான் ஒன்று இவ்வேலிகளை கடந்து செல்ல முயன்றது. அப்போது திடீரென எதிர்பாராதவிதமாக பச்சை நிற நைலான் தடுப்பில் மானின் நீண்ட கொம்புகள் சிக்கிக் கொண்டது. இதனால் நீண்டநேரம் போராடிய மான் சிறிது நேரத்தில் பரிதாபமாக உயிரிழந்தது. இதுகுறித்து அறிந்ததும் மேட்டுப்பாளையம் வனச்சரக அலுவலர் ஜோசப் ஸ்டாலின், வனவர் சுரேஷ் மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உயிரிழந்த புள்ளி மானின் உடலை மீட்டு அரசு மரக்கடங்கு வளாகத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு காரமடை உதவி கால்நடை மருத்துவர் அலுவலர் விமலா தேவி முன்னிலையில் இறந்த மானின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்