விளையாட்டு வீரர்கள் இடஒதுக்கீட்டில் வேலை பெற விண்ணப்பிக்கலாம்

விளையாட்டு வீரர்கள் 3 சதவீத இட ஒதுக்கீட்டில் வேலை பெற விண்ணப்பிக்கலாம் என ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் வளர்மதி தெரிவித்துள்ளார்.

Update: 2023-10-21 17:32 GMT

விளையாட்டு வீரர்கள் 3 சதவீத இட ஒதுக்கீட்டில் வேலை பெற விண்ணப்பிக்கலாம் என ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் வளர்மதி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியதாவது:-

விளையாட்டு வீரர்கள்

தமிழ்நாட்டின் சார்பாக ஒலிம்பிக் மற்றும் பிற சர்வதேச அளவிலான போட்டிகளில் பங்கேற்று பதக்கம் பெற்ற விளையாட்டு வீரர்களுக்கு அரசுத் துறைகள், பொதுத்துறை நிறுவனங்களில் 3 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் வேலை வாய்ப்பு வழங்கப்படுகிறது.

இத்திட்டத்தின் கீழ் வேலைவாய்ப்பு பெறுவதற்கு விளையாட்டுப்போட்டிகளில் கடந்த 2018-ம் ஆண்டு ஜனவரி 1-ந் தேதி அன்றோ அல்லது அதன் பிறகு பெற்ற சாதனைகள் தகுதியானவையாக கருதப்படும்.

சர்வதேச போட்டிகளில் (வெற்றி பெற்றவர்கள்/ பங்கேற்றவர்கள்) கோடைக்கால ஒலிம்பிக், காமன்வெல்த், ஆசிய விளையாட்டு போட்டிகள், சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியால் அங்கீகரிக்கப்பட்ட சர்வதேச விளையாட்டு கூட்டமைப்பால் 4 ஆண்டுகள் அல்லது 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை அல்லது IOC ஆல் அங்கீகரிக்கப்பட்ட ISF-ன் கீழ் ஆண்டுதோறும் நடத்தப்படும் ஆசிய சாம்பியன்ஷிப்கள் போட்டிகள்.

சர்வதேச பார்வையற்றோர் விளையாட்டு சங்கம் காது கேளாதோருக்கான சர்வதேச விளையாட்டுக் குழுவால் ஏற்பாடு செய்யப்பட்ட உலக விளையாட்டுகள் மற்றும் காது கேளாதோர் விளையாட்டுகள்.

கடைசி நாள்

தேசிய அளவிலானபோட்டிகள் (வெற்றி பெற்றவர்கள் மட்டும்) இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தால் அங்கீகரிக்கப்பட்ட தேசிய விளையாட்டு கூட்டமைப்புகளால் நடத்தப்படும் தேசிய சாம்பியன்ஷிப் விளையாட்டு போட்டிகள்.

மாநில அளவிலான சாம்பியன்ஷி போட்டிகள் (வெற்றி பெற்றவர்கள் மட்டும்) தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட மாநில விளையாட்டு சங்கங்கள் நடத்தும் சீனியர் அளவிலான மாநில சாம்பியன்ஷிப் போட்டிகள் மட்டுமே தகுதியான போட்டிகளாக கருத்தப்படும்.

இதற்கு 40 வயதிற்குட்பட்டவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க இயலும். விண்ணப்பதாரர்கள் www.sdat.tn.gov.in என்ற இணையதள முகவரியிலோ அல்லது நேரு விளையாட்டரங்கில் இயங்கிவரும் தலைமை அலுவலகத்தில் நேரிலோ வருகிற 31-ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்