தூத்துக்குடி மீன்வளக்கல்லூரியில் விளையாட்டு விழா

தூத்துக்குடி மீன்வளக்கல்லூரியில் விளையாட்டு விழா நடந்தது.

Update: 2022-06-16 11:34 GMT

தூத்துக்குடி மீன்வளக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் விளையாட்டு விழா நடந்தது. விழாவுக்கு கல்லூரி முதல்வர் சாந்தகுமார் தலைமை தாங்கினார். கல்லூரி விளையாட்டு அலுவலர் பார்த்திபன், உதவி உடற்கல்வி இயக்குனர் நடராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து 25-க்கும் மேற்பட்ட விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்று விளையாடினர். சிறப்பு விளையாட்டு போட்டியாக ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இடையே கயிறு இழுக்கும் போட்டி நடந்தது. ஆசிரியை மற்றும் அலுவலர்களுக்காக வட்டு எறிதல் போட்டியும் நடத்தப்பட்டது.

மாலையில் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு விழா நடந்தது. விழாவில் சிறப்பு அழைப்பாளராக தூத்துக்குடி ஊரக உதவி போலீஸ் சூப்பிரண்டு சந்தீஸ் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினார். நிகழ்ச்சியில் திரளான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். மாணவர் சங்க விளையாட்டுச் செயலாளர் வ. திவாகர் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்