மதர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் விளையாட்டு விழா
மதர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் விளையாட்டு விழா நடைபெற்றது.
கலவை மதர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 19-ம் ஆண்டு விளையாட்டு விழா கலவை சச்சிதானந்த சுவாமி தலைமையில் நடைபெற்றது. பள்ளி தாளாளர் செல்வி வசந்தி முன்னிலை வகித்தார். பள்ளி தலைமை ஆசிரியை சுகுணா வரவேற்புரை ஆற்றினார். விளையாட்டு விழாவில் ராணிப்பேட்டை கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு முத்துக்கருப்பன் கலந்துகொண்டு விளையாட்டு ஜோதியை ஏற்றி வைத்து, வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கி சிறப்புரையாற்றினார். இதில் மாணவர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.