அரசு மருத்துவ கல்லூரியில் விளையாட்டு விழா
திண்டுக்கல் அரசு மருத்துவ கல்லூரியின் 2-வது ஆண்டு விளையாட்டு விழா நேற்று தொடங்கியது.
திண்டுக்கல் அரசு மருத்துவ கல்லூரியின் 2-வது ஆண்டு விளையாட்டு விழா நேற்று தொடங்கியது. இதனை மருத்துவ கல்லூரி முதல்வர் சுகந்தி ராஜகுமாரி தொடங்கி வைத்தார். மருத்துவமனை கண்காணிப்பாளர்கள் வீரமணி சுரேஷ்பாபு, விடுதி காப்பாளர் பிரபாகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதையொட்டி 100 மீட்டர், 200 மீட்டர் ஓட்டம் உள்பட பல்வேறு வகையான தடகள போட்டிகள் மற்றும் கால்பந்து, எறிபந்து, கிரிக்கெட் உள்பட பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடைபெறுகிறது. போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு விழா நாளை (சனிக்கிழமை) நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர்கள் கார்த்திக் ராஜா, செந்தில்குமரன், டீன் வெஸ்லி ஆகியோர் செய்துள்ளனர்.