தந்தை ரோவர் வேளாண்மை கல்லூரியில் விளையாட்டு விழா

தந்தை ரோவர் வேளாண்மை கல்லூரியில் விளையாட்டு விழா நடைபெற்றது.

Update: 2023-07-15 19:13 GMT

பெரம்பலூர் ரோவர் வேளாண்மை கல்லூரியில் ஆண்டு விழாவையொட்டி விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. தந்தை ஹேன்ஸ் ரோவர் கல்வி மற்றும் சமூக மேம்பாட்டு நிறுவனங்களின் மேலாண் தலைவர் ரோவர் வரதராஜன், துணைத்தலைவர் ஜான் அசோக் வரதராஜன் ஆகியோர் விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைத்தனர். மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் மதியழகன் மற்றும் வேலுமணி ஆகியோர் கொடியேற்றி வெற்றிபெற்ற மாணவ- மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினர். இதையடுத்து, மாணவ- மாணவிகளின் அணிவகுப்பு, சாகச நிகழ்ச்சிகள், கலை நிகழ்ச்சிகள் நடந்தன.

பரிசளிப்பு விழாவில் கல்லூரியின் முதல்வர் எம்.கே.சிவா, இயக்குனர் வஹாப் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரியின் உடற்கல்வி ஆசிரியை வாசுகி ஆண்டறிக்கையை வாசித்தார். விழா ஏற்பாடுகளை நிர்வாக அலுவலர் ஜெயசீலன், அலுவலக மேலாளர் திருநாவுக்கரசு ஆகியோர் செய்திருந்தனர். முடிவில் உடற்கல்வி ஆசிரியர் கலையரசன் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்