ஆல்மைட்டி வித்யாலயா பள்ளியில் விளையாட்டு விழா

ஆல்மைட்டி வித்யாலயா பள்ளியில் விளையாட்டு விழா நடைபெற்றது.

Update: 2023-09-03 18:30 GMT

பெரம்பலூர் அருகே சிவாச்சூர் ஆல்மைட்டி வித்யாலயா பப்ளிக் சி.பி.எஸ்.இ. பள்ளியில் 9-ம் ஆண்டு விளையாட்டு விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளியின் தாளாளர் டாக்டர் ராம்குமார் தலைமை தாங்கினார். விழாவில் பெரம்பலூர் போலீஸ் சூப்பிரண்டு பழனிசாமி பேசுகையில், 'என்னடா இது வாழ்க்கை' என்று நினைக்காமல் 'இது என்னோட வாழ்க்கை' என்று நினைத்தால் நிச்சயம் முன்னேறிவிடலாம். அதோடு வாழ்க்கையில் கல்வியின் பாடநூல்களை தாண்டி நல்ல நூல்களை படிக்க பெற்றோர்கள் குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்க வேண்டும் என்றார். இதையடுத்து, இஸ்ரோவின் சந்திரயான் 3-ன் மாதிரி வடிவம் அமைக்கப்பட்டு இஸ்ரோ விஞ்ஞானி ரமேசுடன் எல்.இ.டி. திரை மூலம் காணொலி வாயிலாக பள்ளி மாணவ-மாணவிகள் மற்றும் பெற்றோர்கள், ஆசிரியர்கள் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவில் பெரம்பலூர் இன்ஸ்பெக்டர் சக்திவேல், மேடைப்பேச்சாளர் கயல்விழி, பள்ளியின் பங்குதாரர்கள் மோகனசுந்தரம், சிவக்குமார், ஆசிரியர்கள் ராஜேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதனைதொடர்ந்து லெஸீம் டிரில், கோகனெட் டிரில், பாரீகேண்ட் டிரில், 100 மற்றும் 200 மீட்டர் ஓட்டப்பந்தயம், பெற்றோர்களுக்கான விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. பின்னர் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும், கேடயங்களும் வழங்கப்பட்டன. முன்னதாக பள்ளி முதல்வர்கள் தீபா, சந்திரோதயம் ஆகியோர் வரவேற்றனர். முடிவில் பள்ளி மாணவிகள் நன்றி கூறினார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்