பள்ளி மாணவ-மாணவிகளுக்கு விளையாட்டு போட்டிகள்

பள்ளி மாணவ-மாணவிகளுக்கு விளையாட்டு போட்டிகள் நாளை நடக்கிறது.

Update: 2023-02-06 19:35 GMT

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், பெரம்பலூர் மாவட்டத்தின் சார்பாக 2022-23-ம் ஆண்டிற்கான தமிழ்நாடு முதல்-அமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான தடகளம் மற்றும் குழு விளையாட்டு போட்டிகள் நாளை (புதன்கிழமை) முதல் வருகிற 28-ந்தேதி வரை மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் காலை 8 மணி முதல் நடைபெறவுள்ளது. இதில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு நாளை தடகளம், சிலம்பம், வாலிபால் ஆகிய விளையாட்டு போட்டிகளும், வருகிற 11-ந்தேதி கிரிக்கெட்டும், 13-ந்தேதி கபடி, இறகுப்பந்து, கைப்பந்து ஆகிய போட்டிகளும், 22-ந்தேதி நீச்சல், கால்பந்து ஆகிய போட்டிகளும், 28-ந்தேதி வளைகோல்பந்து, மேசைப்பந்து ஆகிய போட்டிகளும் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நடைபெற உள்ளது.

கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு வருகிற 9-ந்தேதி தடகளம், கபடி, சிலம்பம், இறகுப்பந்து ஆகிய போட்டிகளும், 15-ந்தேதி வாலிபால், கால்பந்து, நீச்சல் ஆகிய போட்டிகளும், 18-ந்தேதி கூடைப்பந்து, கிரிக்கெட் ஆகிய போட்டிகளும், 28-ந்தேதி வளைகோல்பந்து, மேசைப்பந்து ஆகிய போட்டிகளும் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நடைபெற உள்ளது. பொதுப்பிரிவினருக்கு வருகிற 23-ந்தேதி தடகளம், கபடி, வாலிபால், சிலம்பம், இறகுப்பந்து ஆகிய போட்டிகளும், 25-ந் தேதி கிரிக்கெட் போட்டியும் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நடைபெற உள்ளது.

அரசு ஊழியர்களுக்கு...

அரசு ஊழியர்களுக்கு வருகிற 27-ந்தேதி தடகளம், கபடி, வாலிபால், இறகுப்பந்து, செஸ் ஆகிய போட்டிகளும், மாற்றுத்திறனாளிகள் பிரிவில் வருகிற 28-ந்தேதி தடகளம், இறகுப்பந்து, கபடி, எறிபந்து, ஆகிய போட்டிகளும் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நடைபெற உள்ளது.

மேலும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கூடைப்பந்து போட்டியும், பள்ளி மாணவர்களுக்கான வளைகோல் பந்து போட்டியும், மாணவிகளுக்கான கால்பந்து போட்டியும், கல்லூரி மாணவிகளுக்கான கால்பந்து, நீச்சல், கிரிக்கெட் ஆகிய போட்டிகளும், கல்லூரி மாணவர்களுக்கான வளைகோல்பந்து, கூடைப்பந்து ஆகிய போட்டிகளும், பொதுப்பிரிவினரில் பெண்களுக்கான சிலம்பம், கிரிக்கெட் ஆகிய போட்டிகளும், நேரடியாக மண்டல அளவிலான போட்டிகளும் நடைபெறும். இதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும்.

Tags:    

மேலும் செய்திகள்