மாற்றுத்திறன் மாணவர்களுக்கு விளையாட்டு போட்டிகள்

பாவூர்சத்திரம் அரசு பள்ளியில் மாற்றுத்திறன் மாணவர்களுக்கு விளையாட்டு போட்டிகள் நடந்தது.

Update: 2022-11-29 18:45 GMT

பாவூர்சத்திரம்:

பாவூர்சத்திரம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் மாற்றுத்திறன் மாணவர்களுக்கு விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது. தலைமை ஆசிரியர் சுந்தரகுமார் விளையாட்டு போட்டியை தொடங்கி வைத்தார். வட்டார வளமைய மேற்பார்வையாளர் தர்மராஜ் வரவேற்றார். ஆசிரியர் பயிற்றுநர் செல்வமீனாட்சி, வட்டார கல்வி அலுவலர் கிருஷ்ணபாரதி சிறப்புரையாற்றினார். சிறப்பாசிரியர் ரமேஷ் நன்றி கூறினார். மாற்றுத்திறன் மாணவர்களுக்கு வெளி விளையாட்டாக ஓட்டப்பந்தயம், பாட்டிலில் நீர் நிரப்புதல், பலூன் உடைத்தல், பந்து எறிதல், இசை நாற்காலி, பந்து கடத்துதல், முறுக்கு கடித்தல் மற்றும் தாவிக்குதித்தல் ஆகிய விளையாட்டுகள் நடத்தப்பட்டது. விழாவில் கலந்து கொண்ட 30 மாணவர்களுக்கு சிறப்புப் பரிசுகள் வழங்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்