மருத்துவக்கல்லூரிகளுக்கு இடையேயான விளையாட்டு போட்டிகள்

மருத்துவக்கல்லூரிகளுக்கு இடையேயான விளையாட்டுப் போட்டிகள் மதுரையில் நேற்று தொடங்கியது. இதனை மாநகர போலீஸ் கமிஷனர் தொடங்கி வைத்தார்.

Update: 2023-06-08 20:19 GMT


மருத்துவக்கல்லூரிகளுக்கு இடையேயான விளையாட்டுப் போட்டிகள் மதுரையில் நேற்று தொடங்கியது. இதனை மாநகர போலீஸ் கமிஷனர் தொடங்கி வைத்தார்.

மருத்துவ கல்லூரிகள்

தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும், மருத்துவக்கல்லூரிகளுக்கு இடையேயான விளையாட்டு போட்டிகள் மதுரை மருத்துவக் கல்லூரியில் தொடங்கியது. நேற்று தொடங்கிய இந்த விளையாட்டுப் போட்டிகள், வருகிற 11-ந்தேதி வரை 4 நாட்களுக்கு நடைபெறுகிறது. இந்த விளையாட்டுப் போட்டியில் மதுரை மருத்துவ கல்லூரி, சென்னை மருத்துவக் கல்லூரி, ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி, கோவை மருத்துவக் கல்லூரி, அரசு புதுக்கோட்டை மருத்துவ கல்லூரி, திண்டுக்கல், திருப்பூர், விருதுநகர், தேனி, நாகப்பட்டினம், உதகமண்டலம், தஞ்சாவூர், நெல்லை, தூத்துக்குடி, சிவகங்கை, ராமநாதபுரம், திருச்சி உள்ளிட்ட 23 மருத்துவக் கல்லூரிகளில் இருந்தும் 500 மாணவர்கள் மற்றும் 350 மாணவிகள் பங்கேற்கின்றனர்.

தொடக்க விழா

இந்த போட்டிகளுக்கான தொடக்க விழா நேற்று காலை மதுரை அரசு மருத்துவக்கல்லூரி மைதானத்தில் நடந்தது. மதுரை மருத்துவக்கல்லூரி முதல்வர் ரத்தினவேல் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் நரேந்திரன் நாயர் கலந்து கொண்டு போட்டிகளை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் விளையாட்டு ஒருங்கிணைப்பாளர்கள் மணிவண்ணன், விஜயராகவன், முத்துக்குமார், ஷேக் இக்பால் ஹுசைன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதில் கிரிக்கெட், கால்பந்து, கூடைப்பந்து, கபடி, கோ- கோ, டென்னிஸ், கேரம், செஸ், நீச்சல், பளுதூக்குதால் உட்பட 30-க்கும் மேற்பட்ட விளையாட்டுப் போட்டிகள் தனித்தனியாக நடத்தப்படுகிறது.வெற்றி பெறும் மாணவ-மாணவிகளுக்கு அணிகளுக்கும் சான்றிதழ் மற்றும் கேடயங்கள் வழங்கப்படுகிறது. இதற்கான பரிசளிப்பு விழா வருகிற 11-ந் தேதி இரவு மதுரை மருத்துவ கல்லூரி விளையாட்டு மைதானத்தில் நடக்கிறது.

முன்னதாக, ஒட்டுமொத்த சாம்பியன் கோப்பையை, மதுரை மருத்துவ கல்லூரி மாணவர்கள் ஊர்வலமாக எடுத்து வந்தனர். அதனை போலீஸ் கமிஷனர் அறிமுகம் செய்து வைத்தார். இதுபோல், அனைத்து மருத்துவ கல்லூரி மாணவர்களின் அணிவகுப்பு நிகழ்ச்சியும் நடந்தது.

Tags:    

மேலும் செய்திகள்