மாணவ-மாணவிகளுக்கு விளையாட்டு போட்டி
வாசுதேவநல்லூர் எஸ்.தங்கப்பழம் கல்விக்குழுமத்தில் பொங்கல் விழாவையொட்டி மாணவ-மாணவிகளுக்கு விளையாட்டு போட்டி நடந்தது.
வாசுதேவநல்லூர்:
வாசுதேவநல்லூர் எஸ்.தங்கப்பழம் கல்விக்குழுமத்தில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. எஸ்.தங்கப்பழம் கல்வி குழுமத்தின் தலைவர் எஸ்.தங்கப்பழம் மற்றும் தாளாளர் எஸ்.டி.முருகேசன் ஆகியோா் விழாவை தொடங்கி வைத்தனர். மருத்துவ கல்லூரி முதல்வர் (பொறுப்பு) பாரதி, எஸ்.தங்கப்பழம் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் ராமநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாணவ-மாணவிகளின் விளையாட்டு போட்டிகள் மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடந்தது. விழாவில் கல்லூரியின் துறை தலைவர்கள், பேராசிரியர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.