மருத்துவ பணியாளர்களுக்கு விளையாட்டு போட்டி
பொது சுகாதாரத்துறையின் நூற்றாண்டு விழாவையொட்டி மருத்துவ பணியாளர்களுக்கு விளையாட்டு போட்டி நடந்தது.
கன்னிவாடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், பொது சுகாதாரத்துறையின் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி மருத்துவமனை பணியாளர்களுக்கு கயிறு இழுக்கும் போட்டி, கோலப்போட்டி உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. இதைத்தொடர்ந்து போட்டியில் வெற்றி பெற்ற பணியாளர்களுக்கு வட்டார மருத்துவ அதிகாரி செல்லமுத்து, டாக்டர் சாம் இளங்கோ ஆகியோர் பதக்கம் மற்றும் சான்றிதழ்களை வழங்கினர்.