குறுவட்ட அளவில் மாணவிகளுக்கான விளையாட்டு போட்டி
குறுவட்ட அளவில் மாணவிகளுக்கான விளையாட்டு போட்டி நடந்தது.
குன்னம்:
பெரம்பலூர் மாவட்ட பள்ளிக்கல்வித்துறையின் சார்பாக குன்னம் குறுவட்ட அளவிலான 14, 17, 19 வயதுக்கு உட்பட்ட மாணவிகளுக்கான கபடி, வளையப்பந்து, கேரம், கோகோ ஆகிய விளையாட்டு போட்டிகள் வரிசைபட்டியில் உள்ள சரஸ்வதி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நடைபெற்றது. மாவட்ட கல்வி அலுவலர் ஜெகநாதன் தலைமை தாங்கி போட்டிகளை தொடங்கி வைத்தார். மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியர் பத்மாவதி வாழ்த்தி பேசினார். நடுவர்களாக உடற்கல்வி ஆசிரியர்கள் பணியாற்றினர். இப்போட்டிகளில் குன்னம், ஆலத்தூர் தாலுகா பகுதிகளை சேர்ந்த 45 பள்ளிகளில் இருந்து 550 மாணவிகள் கலந்து கொண்டனர்.