அரசு ஊழியர்களுக்கான விளையாட்டு போட்டிகள்
கிருஷ்ணகிரியில் அரசு ஊழியர்களுக்கான விளையாட்டு போட்டிகள் நேற்று நடந்தது.
கிருஷ்ணகிரியில் அரசு ஊழியர்களுக்கான விளையாட்டு போட்டிகள் நேற்று நடந்தது.
விளையாட்டு போட்டி
கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு அரங்கில், தமிழ்நாடு முதல்-அமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள் கடந்த 7-ந் தேதி தொடங்கி நடந்து வருகிறது. இந்த போட்டிகள் வருகிற 27-ந் தேதி வரை நடைபெறுகிறது. 5 பிரிவுகளில் நடந்து வரும் இந்த போட்டிகளில், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் மற்றும் பொதுப்பிரிவினருக்காக விளையாட்டு போட்டிகள் நடந்து முடிந்துள்ளன.
இந்த நிலையில் நேற்று அரசு ஊழியர்களுக்கான விளையாட்டு போட்டிகள் நடந்தன. இதில் கைப்பந்து, கபடி, இறகுப்பந்து, தடகள போட்டிகள் மற்றும் செஸ் ஆகிய போட்டிகள் நடந்தன. ஆண்கள், பெண்களுக்கு தனித்தனியாக போட்டிகள் நடத்தப்பட்டன.
580 ஊழியர்கள் பங்கேற்பு
கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு அரங்கில் நடந்த அரசு அலுவலர்களுக்கான போட்டிகளை மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் மகேஷ்குமார் தொடங்கி வைத்தார். இதில், ஆண்கள் பிரிவில் 400 பேரும், பெண்கள் பிரிவில் 180 பேரும் என மொத்தம் 580 அரசு ஊழியர்கள் கலந்து கொண்டனர்.