கீழக்கரை,
கீழக்கரை அருகே உள்ள சின்ன மாயாகுளம் கிராமத்தில் காமராஜர் இளைஞர் நற்பணி மன்றம், ராமநாதபுரம் இந்திய அரசு இளைஞர் நலன் மற்றும் நேரு யுவகேந்திரா விளையாட்டு அமைச்சகம் இணைந்து விளையாட்டு போட்டி நடத்தியது. இதில், கபடி, வாலிபால், கால்பந்து போன்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன. விழாவில் சின்ன மாயாகுளம் காமராஜர் நற்பணி மன்ற தலைவர் ஆப்ரஹாம் வரவேற்றார். மாயாகுளம் ஊர் தலைவர் சந்திரன் தலைமை தாங்கினார். சதுரங்க விளையாட்டு போட்டி மாவட்ட தலைவர் சுந்தரம், கீழக்கரை ஸ்போர்ட்ஸ் கிளப் உறுப்பினரும், மின் ஹாஜியார் பள்ளி பொருளாளருமான ரமீஸ்கான், போலீஸ் நல்உறவு சங்கம் மாவட்ட தலைவர் பெருமாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நேரு யுவகேந்திரா விளையாட்டு அமைச்சக பல்நோக்கு பணியாளர் பரமேஸ்வரன் சிறப்புரையாற்றினார். முடிவில் காமராஜர் நற்பணி மன்ற செயலாளர் சார்லஸ் நன்றி கூறினார். விழாவையொட்டி காமராஜர் நற்பணி மன்றம் சார்பில் அனைவருக்கும் உணவு வழங்கப்பட்டது.