மாற்றுத்திறன் மாணவர்களுக்கு விளையாட்டு போட்டிகள்

கிருஷ்ணகிரி அருகே மாற்றுத்திறன் மாணவர்களுக்கு விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது.

Update: 2022-11-30 18:45 GMT

கிருஷ்ணகிரி அருகே மாற்றுத்திறன் மாணவர்களுக்கு விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது.

விளையாட்டு போட்டி

கிருஷ்ணகிரி அருகே கட்டிகானப்பள்ளி பள்ளியில் உள்ள ஆயத்த பயிற்சி மையத்தில் மாற்றுத்திறன் மாணவர்களுக்கு விளையாட்டு போட்டிகள் நடந்தன. இந்த போட்டியை வட்டார வள மைய மேற்பார்வையாளர் அசோக், வட்டார கல்வி அலுவலர்கள் செல்வராஜ், சீனிவாசன், பள்ளி தலைமை ஆசிரியர்கள் திம்மராஜ், சேகர் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

மாற்றுத்திறன் மாணவர்களுக்கு, லெமன்ஸ்பூன், உருளை கிழங்கு சேகரித்தல், பலூன் உடைத்தல், ஓட்டப்பந்தயம், பாட்டிலில் தண்ணீர் சேகரித்தல், இலக்கை நோக்கி பந்து எறிதல் உள்ளிட்ட விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் கிருஷ்ணகிரி ஒன்றியத்தில் பள்ளிகளில் படிக்கும் 21 வகையான மாற்றுத்திறன் மாணவர்கள் போட்டியில் கலந்து கொண்டனர்.

சான்றிதழ்

இந்த போட்டிகளில் வெற்றி பெற்ற அனைவருக்கும் பரிசுகள், பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இதில் ஆசிரியர் பயிற்றுனர்கள், தமிழ்தென்றல், ராஜேந்திரன், நளினா, ரமணி, சாந்தி, திவ்யா, அம்பிகா மற்றும் மாற்றுத்திறன் மாணவர்களுக்கான சிறப்பு பயிற்றுனர்கள் அருண்குமார், ஜித்தன், சத்யா, நித்யகலா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்