விளையாட்டு போட்டி
கம்பத்தில் போலீஸ்-பொதுமக்களுக்கு இடையே விளையாட்டு போட்டி நடந்தது.
உத்தமபாளையம் போலீஸ் உட்கோட்டம் சார்பில் போலீசார் மற்றும் பொதுமக்களுக்கு இடையே நல்லுறவை மேம்படுத்தும் வகையில் விளையாட்டு போட்டிகள் கம்பம் சி.பி.யூ. பள்ளி மைதானத்தில் நடந்தது. இதில் தடகளம், கபடி, வாலிபால் போட்டிகள் நடைபெற்றன. இந்த போட்டியை உத்தமபாளையம் உதவி போலீஸ் சூப்பிரண்டு மதுகுமாரி தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். விளையாட்டு போட்டிகளில் போலீசார், தீயணைப்பு படை வீரர்கள், கல்லூரி மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள், பொதுமக்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தாமரை கண்ணன், பள்ளி தலைமை ஆசிரியர் அப்தாஹிர் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.