நாமக்கல் மாவட்ட அளவிலானமுதல்-அமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள் நிறைவு11,900 பேர் பங்கேற்பு

Update: 2023-02-15 19:00 GMT

நாமக்கல்லில் நடைபெற்று வந்த மாவட்ட அளவிலான முதல்-அமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள் நேற்றுடன் நிறைவடைந்தது. இதில் 11,900 பேர் கலந்து கொண்டனர்.

மாற்றுத்திறனாளிகளுக்கு போட்டி

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் நாமக்கல் மாவட்ட பிரிவு சார்பில் மாவட்ட அளவிலான முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் நடந்து வந்தது. இறுதிநாளான நேற்று மாற்றுத்திறனாளிகளுக்கான ஓட்டப்பந்தயம் நடத்தப்பட்டது. மாவட்ட விளையாட்டு அலுவலர் கோகிலா தலைமை தாங்கி போட்டிகளை தொடங்கி வைத்தார். இதில் 123 மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர்.

இதேபோல் பொதுப்பிரிவினருக்கான கபடி இறுதிபோட்டி நேற்று நடந்தது. இந்த போட்டியில் நாமக்கல் மற்றும் குமாரபாளையம் அணிகள் மோதின. பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் நாமக்கல் அணி வெற்றி பெற்றது. மேலும் அரசு ஊழியர்களுக்கான செஸ் போட்டி உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இதில் 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

11,900 பேர் பங்கேற்பு

இதுவரை நடைபெற்ற போட்டிகளில் பள்ளி மாணவர்கள் 4,172 பேரும், மாணவிகள் 1,876 பேரும், கல்லூரி மாணவர்கள் 2,209 பேரும், மாணவிகள் 1,798 பேரும், அரசு ஊழியர்கள் 924 பேரும், பொது பிரிவில் 798 பேரும், மாற்றுத்திறனாளிகள் 123 பேரும் என மொத்தம் 11,900 பேர் கலந்து கொண்டதாக மாவட்ட விளையாட்டு அலுவலர் தெரிவித்தார்.

போட்டியில் முதலிடம், இரண்டாமிடம், மூன்றாமிடம் பெறுபவர்களுக்கு முறையே ரூ.3 ஆயிரம், ரூ.2 ஆயிரம், மற்றும் ரூ.1,000 பரிசுத்தொகை வங்கி கணக்கில் செலுத்தப்படும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும் சிறந்த வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு, மாநில போட்டிக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என்றும் மாவட்ட விளையாட்டு அலுவலர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்