மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான விளையாட்டு போட்டி
மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான விளையாட்டு போட்டி நடந்தது.
தொண்டி,
தொண்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் வட்டார வள மையத்தின் சார்பில் மாற்றுத்திறனாளி குழந்தை களுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. வட்டார கல்வி அலுவலர் வசந்த பாரதி தலைமை தாங்கி னார். போட்டிகளில் திருவாடானை வட்டாரத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளி மாணவர்கள் கலந்துகொண்டனர். போட்டி களில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பள்ளி தலைமை ஆசிரியை அருணா செல்வி பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கினார். நிகழ்ச்சியில் பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர் காஞ்சனா, வட்டார வளமைய ஆசிரிய பயிற்றுனர் ஜெபஸ்டின் ஜெயராஜ், கார்த்திக், காளமேகலை, மேற்கு பள்ளி தலைமை ஆசிரியை சாந்தி உள்பட பலர் கலந்துகொண்டனர்.